இருபது ஆண்டுகளுக்கு பிறகு தேர்கிஷ் விமானம் சோமாலியா சென்றடைந்துள்ளது

துருக்கி விமானச் சேவைக்கு சொந்தமான இந்த வர்த்தக விமானம் சோமாலிய தலைநகர் மொகாடுஷ¤ விமான நிலையத்துக்கு நேற்று வந்திறங்கியது.
 இந்த விமானத்தில் துருக்கி துணைப் பிரதமர் பாகிஸ் பொஸ்டக்கும் வந்திறங்கினார்.

அவரை சோமாலிய ஜனாதிபதி ஷெய்க் ஷரிப் அஹமட் வரவேற்றார். இந்த விமானம் வருவதையொட்டி தலைநகரில் வீதிகள் மூடப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிவில் யுத்தம் நீடித்துவரும் சோமாலியாவில் மத்திய அரசொன்று செயற்படவில்லை. சோமாலிய அரசு நீண்ட காலமாக அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஆயுதக்குழுவுடன் போராடிவருகிறது.