இரண்டு வாரம் நீளும் இந்தியா-அமெரிக்கா
கூட்டு ராணுவ போர் ஒத்திகை ராஜஸ்தான் பாலைவனத்தில் துவங்கியது. தீவிரவாத
எதிர்ப்பு போர் தந்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பயிற்சி இங்கு
நடைபெறுகிறது.
கர்னல் தாமஸ் ஜெ ரோதனின் தலைமையிலான 170 நபர்களை கொண்ட குழு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது.
பிரிகேடியர் பி.எஸ்.தனோவாவின் தலைமையிலான ஜம்மு-கஷ்மீர் ரைபிள்ஸைச் சார்ந்த ராணுவ வீரர்கள் இந்திய குழுவில் இடம் பெற்றுள்ளனர். இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது போர் அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பிரகடனப்படுத்தும் ஒத்திகையில் ராணுவ வாகனங்களும், நவீன போர் உபகரணங்களும் உபயோகிக்கப்படும்.

போராளிகளை தேடி கண்டுபிடிப்பது, அவர்களை
வீழ்த்துவது உள்ளிட்ட போர் தந்திரங்களுக்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டுள்ளது. ஐ.இ.டி உள்ளிட்ட வெடிப் பொருட்களை கையாளுவது,
கண்டுபிடிப்பது, செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப கலைகளும்
ஒத்திகையில் இடம்பெறும்.
பாகிஸ்தானை மையமாக கொண்ட போராளிகளின்
தாக்குதலை தடுப்பதற்கு சிறப்பு பயிற்சிபெற்ற அமெரிக்க ராணுவத்தினர்
இந்தியாவில் செயல்படுவதாக அமெரிக்க பசிஃபிக் கமாண்டின் அட்மிரல் ராபர்ட்
வில்லார்ட் அமெரிக்க காங்கிரஸில் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இதனை இந்தியா மறுத்துள்ளது.