ஈரானிடம் இஸ்ரேல் வாங்கிக்கட்டப் போகும் நேரம் நெருங்குவதாக தகவல்

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பிரதமர் ஆற்றியுள்ள உரை ஈரானை இஸ்ரேல் தாக்க போகும் நேரம் அண்மித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைப்பு- American Israel Public Affairs Committee (AIPAC) யின் கூட்டத்தில்  கலந்து கொண்டு
உரையாற்றிய நெதன்யாஹூ ஈரான் அணுவாயுதத்தை தயாரிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும், நாங்கள் அதிகம் காத்திருந்து விட்டோம் இராஜதந்திரம் செயல்படும் என்று காத்திருந்தோம் , பொருளாதார தடை செயல்படும் என்று காத்திருந்தோம் ஆனால் இனியும் எம்மவர் காத்திருக்க முடியாது ,
இஸ்ரேலை பாதுகாக்கும் உரிமை எனக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார் 
.




அவரின் உரை இஸ்ரேல் ஈரானை தாக்கும் நேரம் அண்மித்து வருவதை காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஈரானிடம் இஸ்ரேல் வாங்கிக்கட்டும் நேரம் நெருங்குவதாகவும் இதை எடுதுகொள்ளமுடியும்.

அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்ற முன்னர் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார். அதன்போது ஈரானிய அணுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது . அதன்போது காலம் கடந்துகொண்டு போகிறது, ஈரானின் அணுசக்திக் கூடங்கள் எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று ஒபாமாவை அவர் கேட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவித்தன. ஆனால் இப்போதைக்கு இராணுவ நடவடிக்கை என்ற விஷயத்துக்கு செல்லக்கூடாது, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் எடுக்கப்பட்டுவரும் புதிய ராஜதந்திர முயற்சிகள் பலன் அளிப்பதற்கு சற்று கால அவகாசம் வழங்க வேண்டும் என ஒபாமா தெரிவித்துள்ளாராம் .

அதேவேளை இஸ்ரேல் தனியாக இராணுவ தாக்குதல்களை ஈரான் மீது மேற்கொள்ளும் போது அமெரிக்கா எவ்வாறு செயல்படும் என்பது பற்றி பகிரங்கமாக எதையும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை.  இஸ்ரேல் ஈரானை தாக்கும்போது ஈரானின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெளிவான  திட்டங்களை கொண்டுள்ளபோதும் வெள்ளை மாளிகை பகிரங்கமாக அது பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை என்று சர்வதேச அவதானிகள் தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேல் பிரதமரின் உரை தாக்குதலுக்கான நேரம் அண்மித்து விட்டதாக கொள்ளமுடியும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு என்றும் அமெரிக்கா இரும்பு அரணாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

oruummah