தக்பீர் கட்டுவது நெஞ்சிலா வயிற்றிலா என்று வீடு வீடாக ஊர் ஊராக ஏன் நாடு நாடாக நாம் வாக்கு வாதப்பட்டுகொண்டிருக்க நம் வாக்கு வாதங்களில் குளிர் காய்ந்து கொண்டு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்துக்கொண்டிருக்கும் மிகப்பலம் பொருந்திய அமைப்பு ஓன்று தனது கொள்கை மாநாட்டை அமெரிக்காவில் நடத்தியது
அமெரிக்க -இஸ்ரேலிய பொது உறவுகள் ஆணைக்குழு(AIPAC ) என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆணைக்குழு என்றவுடன் நமது நாட்டில் ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்களில் ஒன்றுதான் என்று நீங்கள் நினைத்தால் அது மெத்தப்பெரிய தப்பு .
இன்றைய உலக அரசியல் மேடையில், மத்திய கிழக்கின் தலை விதி யில் தாறு மாறாக செல்வக்குச்செலுத்திக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பலம் பொருந்திய அமைப்புதான் ஐபக்
இன்று முஸ்லீம்கள் கண்ட நாய்களால் காடையர்களால் கடைவாளிப்பயல்களால் கண்ட இடங்களில் வேட்டையாடப்படுவதற்கான கொள்கையை வகுக்கும் தலைமை பொறுப்பில் உள்ள அமைப்புதான் இது .
ஐபக்கின் கொள்கை வகுக்கும் மாநாடு நாளை அமெரிக்காவில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது .
சரி இந்த ஐபெக் அப்படி என்ன பெரிய அமைப்பா என்று நீங்கள் கேட்பது கேட்கிறது ? பொறுமையாக இந்த கட்டுரையை வாசியுங்கள் பின்னர் நீங்களே அதை தீர்மானியுங்கள் .
1963 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி இச்சயாஹ் எல்.சீ .கேன்னோன் என்ற அமெரிக்க சியோனிச வாதியால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய அமைப்புதான் ஐபக். அந்த அமைப்பை உருவாக்கும் போது கேன்னோன் என்ற அவன் அமெரிக்க சியோனிச குழுவை நடத்திக்கொண்டிருந்தான்.
சியோனிசத்தை வைத்து நேரடியாக வியாபாரம் நடத்தினால எடுபடாது என்று எண்ணிய அவன் அமெரிக்காவுக்குள் சியோனிசத்தை மறைத்து உருவாக்கிய அந்த அமைப்புதான் ஐபக்.
விரல் விட்டு எண்ணக்கூடியவர்களை அங்கத்தவர்களாக கொண்டிருந்த அது இன்று ஒரு இலட்சம் அங்கத்தவர்களை தனகத்தே கொண்டுள்ள அமைப்பு
இரு இலட்சம் தானே என்று நீங்கள் எண்ணுவதும் கேட்கிறது .அந்த ஒரு இலட்சம் அங்கத்தவர்கள் சாதாரண சாமான்ய மக்கள் இல்லை . அங்கத்தவர்கள் எல்லாம் மிகப் பெரிய வர்த்தகர்கள் ,செல்வாக்கு மிக்க அரசியல் வாதிகள் ,தொழிலதிபர்கள்,கல்வி மான்கள் என்று தொடருகின்றது அந்த பட்டியல் .
இந்த அமைப்பு 1963 இல் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் நோக்கங்களை அது 1970 வரை அடைய தொடங்கவில்லை .
அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் இந்த அமைப்பு பற்றி கூறும் போது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கொள்கையை தீர்மானிப்பதிலும் வகுப்பதிலும் மிக முக்கியமான செல்வாக்குச்செலுத்தும் அமைப்பு இது என்று கூறியுள்ளார்
இந்த அமைப்பின் நோக்கம் என்ன தெரியுமா ? அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலின் தோழமை நாடாக இருப்பதை உறுதிப்படுத்துவது , இஸ்ரேலுக்கு ஆதரவான கொள்கைகளை அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தல் ,இஸ்ரேலிய எல்லையை பாதுகாத்தல் ,அமெரிக்காவின் மத்திய கிழக்கு வெளிநாட்டு கொளகையில் செல்வாக்கு செலுத்துவது,இஸ்ரேலிய நிதி மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வது ,அடிக்கடி காங்கிரஸ் அங்கத்தவர்களை கூட்டி தனது கொளகைகளை விளக்குவது என்று தொடர்கிறது அதன் நோக்கங்கள்
இந்த நோக்கங்களை அடைய அது அமெரிக்காவில் மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளிலும் குள்ள நரித்தனமாக செயற்பட்டு வருகிறது.எந்த வகையிலும் பிடி கொடுக்காமல் கழுவும் நீரில் நழுவும் மீனாக தப்பித்து சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இஸ்ரேலின் வாழ்வுத்தன்மையை உறுதி செய்யும் அமைப்புதான் இது
இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் தனியே ஒரு அரசியல் கட்சியோடு நிற்கவில்லை மாறாக குடியரசு ,மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சி அங்கத்தவர்களும் அங்கம் வகிக்கின்றனர் .
இந்த அமைப்பு அரசியல் கட்சிகளுக்கும் ,அரசியல் வாதிகளுக்கும் நேரடியாக நிதி உதவி வழங்கி சர்ச்சையில் சிக்குவதில்லை மாறாக இந்த அமைப்பின் அங்கத்தவர்களே அரசியல் கட்சிகளுக்கும் ,அரசியல் வாதிகளுக்கும் நிதி உதவி செய்து வருகின்றனர். 1990 முதல் இன்று வரை மாத்திரம் இந்த ஐபக் அமைப்பின் அங்கத்தவர்கள் அரசியல் கட்சிகளுக்கும் ,அரசியல் வாதிகளுக்கும் செலவழித்த பணம் எவ்வளவு தெரியுமா? சுமார் 568 மில்லியன் டொலர்கள் .
2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் அமெரிக்காவில் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் வாதிகளுக்கு தலா 72 ஆயிரம் டொலர்களை 50 ஐபக் அங்கத்தவர்கள் வழங்கியுள்ளனர் என்று அமேரிக்க அரசியல் ஆய்வு நிலையம் கூறுகிறது .
அமெரிக்காவில் உள்ள அரசியல் வாதிகள் இந்த அமைப்பை பகைத்துக்கொண்டு தமது அரசியல் வாழ்க்கைக்கு மண்ணள்ளி போட விருப்பம் இல்லாமல் இந்த அமைப்பில் அங்கத்தவர்களாகி விடுவதை காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்க மொத்த பாராளு மன்ற உறுப்பினர்கள் ,செனட்டர்கள் ஆகியோரில் மூன்றில் இரண்டு வீதமானோர் இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் என்பது கசப்பான உண்மை.
ஐபக் அரசியல் வாதிகளை தமது அங்கத்தவர்களாக்க முயலும் ,அந்த அரசியல் வாதி அதற்கு இணங்கும் பட்சத்தில் அதற்குரிய வெகுமதிகளையும் ,அவரது தேர்தல் பிரசார செலவையும் அது செய்யும். அவருக்கு நிதி உதவிகளையும் அன்பளிப்பு என்ற பேரில் வழங்கும் .அவ்வாறு இல்லாமல் அந்த அரசியல் வாதி முரண்டு பிடிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக போட்டியிடும் அரசியல் வாதியை கையில் போட்டு அவரை வெல்ல வைப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் . முரண்டு பிடிக்கும் அரசியல் வாதி கடந்த காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ விட்ட தவறுகளை ஐபக் பகிரங்கமாக கொண்டு வந்து அந்த அரசியல் வாதியை சாந்தி சிரிக்க வைக்கும் இதுதான் ஐபக் செய்யும் சின்னத்தனமான செயற்பாடு .

ஏற்கனவே அரசியல் வாதிகளாக இருப்பவர்களை கைக்குள் போடும் செயற்பாடு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க பிரபல அமெரிக்க பல்கலைக்கழங்களில் உள்ள திறமை சாலிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி என்ற பேரில் தமது கொள்கையை புகுத்தி அவர்களை அரசியலில் இழுத்து போட்டு அவர்களை அரசியல் வாதிகளாக்கும் முயற்சியிலும் இது ஈடுபட்டு வருகின்றது .
இந்த அமைப்பு அமெரிக்க அரசியல் வாதிகள் மூலம் இஸ்ரேலுக்கு ஆதரவான தனது போக்கை நிலை நாட்டி வருகின்றது . இது எடுக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவான ஒவ்வொரு தீர்மானமும் வெற்றி பெறுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் இந்த அமைப்பின் பலத்தை பறைசாற்றுகிறது
இது அண்மைக்கலாத்தில் அடைந்துள்ள மாபெரும் வெற்றிகள் பல.அவற்றில் சில இவை
1995 இல் பாலஸ்தீன போராளிகளை இலக்கு வைத்து சர்ச்சைக்குரிய பயங்கர வாத சட்ட மூலத்தை வெற்றிகரமாக பாராளுமன்றத்தில் நிறை வேற்ற வைத்தமை
ஐபக் ஈராக் மீதான அமெரிக்க தாக்குதலை நடத்த ஆரம்பம் முதல் அமெரிக்காவை நிர்ப்பந்தித்து வந்தது அதில் வெற்றியும் பெற்றது . ஈராக் மீதான தாக்குதலை நடத்த ஐபக் ஆரம்பம் முதலே முயற்சி செய்து வந்ததாக அமெரிக்க வட விர்ஜினியா பகுதியின் குடியரசு கட்சியின் அங்கத்தவர் ஜிம் மோகன் 2007 ஆம் ஆண்டு வெளிப்படையாக தெரிவித்தார்
இஸ்ரேலின் சுய பாதுகாப்பு என்ற பேரில் அமெரிக்கா கண்டு பிடித்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை தொழினுட்பத்தை வழங்கி எரோ என்ற இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்க வைத்தமை
ஆளில்லாத அமெரிக்க விமான தொழினுட்பத்தை இஸ்ரேலுக்கு வழங்க வைத்தமை.
பல்வேறு வகையாயான ஏவுகணைகள், அதி நவீன விமானங்களை இராணுவ உதவி என்ற பேரில் இஸ்ரேலுக்கு வழங்க வைத்தமை
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று வரை 108 பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க நிதி உதவிகளை இஸ்ரேலுக்கு செய்ய வைத்தமை .
2010 ஆம் ஆண்டில் மாத்திரம் இஸ்ரேலுக்கு அமெரிக்காவினால் 2 .775 பில்லியன் டொலர் இராணுவ உதவிகளை வழங்க வைத்தமை
அடுத்த பத்து வருடங்களுக்கு அமெரிக்க மூலம் 30 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு உதவியாக வழங்க பாரளுமன்றம் மூலம் இணங்க வைத்துள்ளமை
அமெரிக்காவில் செப்டம்பர் 11 ஐ நடத்தியதில் ஐபக்கிக்கு நேரடி தொடபு இருப்பதாக பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன . இதை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக இருந்த டிக் செனி ஒரு முறை வாய் தடுமாறி கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது
2001செப்டம்பர் 11 இன் பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற பேரில் முஸ்லீம்களுக்கு எதிரான போரை ஆரம்பிக்க செய்தமை
என்று தொடர்கிறது அதன் வெற்றி நடவடிக்கைகள்
அமெரிக்க அரசியல் வாதிகளை தமது கைகளுக்குள் போட்டு அமெரிக்க மக்களை முட்டாள்களாக்கும் இந்த அமைப்பின் நடவடிக்கைகளுக்கு உதாரணமாக 2009 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் அமெரிக்க பாராளுமன்ற உப ஆணைக்குழு முன்னிலையில் பேசிய ஐபக்கின் நிறைவேற்று பணிப்பாளர் ஹோவாட் ஹோஹ்ர்
"அமெரிக்கா தனது வெளிநாட்டு இலக்குகளை அடைவதில் இஸ்ரேலுக்கு உதவி செய்வது மிக மிக அவசியம் " என்று கூறினார் இதையடுத்து அடுத்த பத்து வருடங்களுக்கு 30 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்தது
இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது .ஒரு இஸ்ரேலியன் ,பிரிட்டிஷ் ,அமெரிக்கன் ,சீனன் ,ஆகியோர் தேநீர் குடித்து கொண்டிருந்த போது அவர்களின் தேநீருக்குள் ஈ விழுந்து விட்டது . சீனன் ஈயோடு தேநீரை குடித்தானம்.அமெரிக்கன் ஈயை எடுத்து விட்டு குடித்தானம் , பிரிட்டிஷ் தேநீரை ஊற்றி விட்டானாம் .இஸ்ரேலியன் ஈயை எடுத்து சீனனுக்கு விற்றானாம் தேநீரை அமெரிக்கனுக்கு விற்றானாம்
இந்த கதையை ஏன் சொன்னேன் என்றால் அமெரிக்க அரசியல் வாதிகளுக்காக ஐபக் செலவழித்த தொகை ஒரு பில்லியன் கூட இருக்காது ஆனால் இஸ்ரேலுகுகாக அவர்கள் இதுவரை அமெரிக்காவிடம் எடுத்த தொகை 108 பில்லியன் டொலர் ஆகும் . கிள்ளியெடுத்து கொடுத்து ,கொள்ளையடிப்பது என்பது இதுதானோ
அது அவ்வாறு இருக்க ,ஐபக் அமெரிக்க வரலாற்றில் மிக குள்ளனரித்தனமாய் தனது காய்களை
நகர்த்தி வந்துள்ள போதும் சில வேளைகளில் கால் தடுமாறி விழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன .
1970 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க செனட்டர் வில்லியம் புல்ப்ரைட் மற்றும் சி ஐ ஏ இன் சிரேஷ்ட அதிகாரி ஆகியோர் ஐபக் வெளிநாட்டு முகவராக பதியப்பட வேண்டும் என்ற வாதத்தை கொண்ட வந்தனர் .ஆனால் அந்த வாதம் அந்த அமைப்புக்கு இருந்த செல்வாக்கினால் மறைக்கப்பட்டது
1992 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஐபக் குக்கு உள்ள செல்வாக்கு குறித்தும் ,சிறிய ஒரு அமைப்பாக இருந்து கொண்டு பெரிய நாடான அமெரிக்கவை ஆட்டிப்படைக்கும் இந்த அமைப்பின் பலம் குறித்தும் சாமான்ய மக்களுக்கு விளங்க வைப்பதற்கான முயற்சியில் ஈடு பட்டார் நியூயோர்கை சேர்ந்த காணி வியாபாரியான யூத மதத்தை சேர்ந்த ஹய்ம் கட்ஸ் என்பவர் .அவர் அப்போதைய ஐபக் தலைவரை அணுகி தன்னுடன் மறைத்து வைத்திருந்த ஒலிப்பதிவுக்கருவியில் அவருடன் பேசிய பேச்சை இரகசியமாக ஒலிப்பதிவு செய்தார்
அந்த ஒலிப்பதிவில் தனக்கு ஐபக் அங்கத்தவர் என்ற வகையில் உள்ள அரசியல் செல்வாக்கு குறித்து பறைதட்டினார் அப்போதைய ஐபக் தலைவர் டேவிட் ஸ்டைனர் .அந்த ஒலிப்பதிவில் அவர் பேசியது இது ;
"புஷ்ஷின் வெளிநாட்டு அமைச்சர் ஜிம் பேகரை சந்தித்தேன்.அவர்களுக்கு யூத வாக்குகள் தேவை என்று என்னிடம் கூறினார்.இஸ்ரேலுக்கு மூன்று பில்லியன் டொலர் பொருளாதார உதவியை வழங்க அவரை சம்மதிக்க வைத்தேன் .அதற்கு மேலாக இஸ்ரேலுக்கு 10 பில்லியன் கடன் உத்தரவாதத்தை வழங்கவும் அவரை தூண்டி சமாதிக்க வைத்தேன் .இதற்கு மேலதிகமாக பல இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்கவும் அவரை சம்மதிக்க வைத்தேன் .அத்தோடு கிளிண்டனோடு பேரம் பேசியும் உள்ளேன் . அவர் ஆட்சிக்கு வந்தால் ஐபக் அங்கத்தவர்கள் பலர்க்கு உயர் பதவிகள் பெறுவார்கள் ."
இந்த ஒலிப்பதிவு அப்போது அமெரிக்காவை அதிர வைத்தது .தமது நாட்டில் உள்ள சின்னஞ்சிறிய அமைப்பு ஓன்று உலக வல்லரசையே ஆட்டிப்படைக்கிறதா என்று அமெரிக்க மக்கள் யோசிக்க முன்னர் ஐபக் யோசிக்க தொடங்கியது .மக்களை திசை திருப்பும் முகமாக உடனடியாக டேவிட் ஸ்டைனரை ஐபக் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது .
இது எப்படி இருக்கிறது ?
செய்வதை செய்து விட்டு நான் செய்யவில்லை என் கைதான் செய்தது என்று கூறுவது போல் இல்லையா ? இங்கேதான் ஐபக்கின் சாமர்த்தியம் உள்ளது .தனி நபர்களை விட இஸ்ரேலின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் முக்கியம் அளித்தது அது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் கப் சிப் என்று கதை மாறியது .ஐபக் பற்றி மக்கள் பேசாமல் டேவிட் ஸ்டைனர் பற்றி மக்கள் பேசத்தொடங்கினர் .
பசுந்தோல் போற்றிய பிசாசாக இருக்கும் இந்த அமைப்பு அமேரிக்காவின் தேசிய பாதுகாப்பையும் ,உலக வல்லரசு ஸ்தானத்தையும் வைத்து அமெரிக்க வெளிநாட்டு கொள்கை வகுத்து தனது குறிக்கோளை அடைந்து வருகிறது
2005 ஆம் ஆண்டில் இதே போன்ற சம்பவம் இடம்பெற்றது .2005 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் முக்கிய இரகசியம் வாய்ந்த தகவல்களை இரகசியமாக இஸ்ரேலுக்கு வழங்கியமை எப் பீ ஐ யால் கண்டு பிடிக்கப்பட்டது .ஐ பக்கின் கொள்கை பணிப்பாளர் ஸ்டீவ் ரோஸும் ஐபக்கின் ஈரானுக்கான ஆய்வு நிபுணர் கீத் வீஸ்மான் ஆகியோர் எப் பீ ஐ யால் குற்ற வாளிகளாக காணப்பட்டனர் ..அவர்களை ஐபக் உடனடியாகஅவர்களின் பதவிகளில் இருந்து விலக்கியது.அவர்கள் மீது நீதி விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் இருந்த நிலையில் திடீரென்று 2009 ஆம் ஆண்டில் அவர்கள் மீதான அனைத்து குற்றங்களும் கைவிடப்பட்டது . ஐபக்கின் இரகசிய வேலை நீதிமன்றம் வரை செல்லும் என்பது இதற்கு ஆதாரம்

அதே 2005 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவ இரகசியங்களை 25 ஐபக் அங்கத்தவர்களுக்கு வழங்கியமைக்காக அமெரிக்க இராணுவ தலைமையகத்தில் பணி புரிந்த ஊழியர்கள் பலர் அவர்களதுவேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்தனர் .பின்னர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் திடீரென கைவிடப்பட்டிருந்தன .
2005 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க விமானப்படையில் பணி புரிந்த லாரென்ஸ் அந்தோணி என்பவர் இஸ்ரேலுக்கு இரகசிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதி அமைச்சினால் விசாரிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வாசிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் வைத்து 151 மாத(13 வருட ) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் 10 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டார் . ஆனால அங்கும் ஐப்பெக்கின் கை வரிசை காட்டப்படாமல் இருக்கவில்லை . ஐபக்கின் தலையீட்டினால 2009 ஆம் ஆண்டு அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்
அவை வெளியே கசிந்த விடயங்கள் .வெளியே வராமல் பணத்தால் அடைக்கப்பட்ட எத்தனையோ விடயங்களுக்கு ஐபெக் காரணமாக இருந்துள்ளது .
ஒரு சிறிய அமைப்பு அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் நிலையில் இருக்கின்றதென்றால் அங்கு யூத சமூகத்தின் ஒருமித்த முயற்சியே அதற்கு காரணம் . 1960 களில் போட்ட விதை இன்று அவர்களுக்கு கனியாக பயன் கொடுத்துக்கொண்டிருகின்றது .
அமெரிக்காவில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜோன் மேர்சிமர் மற்றும் ஹோவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஸ்டீவன் வால்ட் ஆகியோர் செய்த 'இஸ்ரேலிய லொபியும் அமெரிக்க வெளிநாட்டு கொள்கையும் என்ற ஆய்வில் இப்படி கூறுகின்றனர்
"அமெரிக்காவில் உள்ள மிக பிரபல்யமான பலம் வாய்ந்த அமைப்பு இதுவாகும் . தமது கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி ரீதியாக வழங்குவதுடன் அதற்கு எதிராக நிற்போரை தண்டிப்பதும் இந்த அமைப்பின் திறமை ஆகும் .இதில் அது தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது .தனது நண்பர்கள் பலமான நிதி ஆதரவு பெறுவதை அது உறுதிபடுத்துகிறது ."
இன்று முழு அமெரிக்காவையும் இந்த அமைப்பு மூலம் தமது கட்டுப்பாட்டில் யூதர்கள் வைத்துள்ளார்கள்.
முஸ்லீம்களாகிய நாம் நமது எதிர் கால சந்ததிகளை நாட்டின் தூண்களாக , நாட்டில் செல்வாக்கு செலுத்தும் சக்திகளாக உருவாக்க வேண்டும் என்றால் வீண் பிரிவுகளை,பிளவுகளை மறந்து நம்மை ஒற்றுமைப்படுத்த வேண்டும் . நமது சமூகத்தில் உள்ள பணத்துக்கு தலைவணக்கும் தன்மையை இல்லாது ஒழித்து கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தி கல்வி மூலம் பணம் உழைக்கும் தன்மையை காட்ட வேண்டும் , அனைத்துக்கும் மேலாக மார்கத்தையும் தன்னம்பிக்கையையும் கற்றுக்கொடுக்க வேண்டும் .
எல்லாம் வல்ல அல்லாஹ் யூதர்களின் சதிகளில் இருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக ..






