சோமாலியா வறுமையில் தவிக்கிறதா ??(இயற்கை வாயு,எண்ணை,யுரேனியம் காக) வறுமை ஆக்கப்பட்டு தவிக்கிறதா???


பெருச்சாளிகளையும் ,எலிகளையும் அழைத்து  காட்டுக்குள் மாநாடாம் ,சிங்கம் புலிகள் ஒன்றும் அழைகப்படவில்லையாம். இதுதான இன்று லண்டனில் நடந்து முடிந்த சோமாலியாவின் ஸ்திரப்பாடு சம்பந்தமான மாநாட்டின் கதை

சோமாலியாவின் பெரும் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள  அல் ஷபாப் குழு தவிர 55  நாடுகள் ,அமைப்புக்கள் அனைத்தையும் அழைத்து நடைபெற்ற இந்த மாநாட்டில்  சோமாலியாவில் ஸ்திரப்பாட்டை ஏற்படுத்துவது ,கடல் கொள்ளையை முறியடிப்பது ,பயங்கர வாதத்துக்கு எதிராக போராடுவது என்ற தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளன

ஆடு நனைகிறது என்று ஓநாய் ஒப்பாறி  வைத்த கதைதான் மீண்டும் ஞாபகம் வருகிறது
வறுமை என்றவுடனும் பஞ்சம் என்றவுடனும் முல்லும் தோலுமாக      காட்சி அளிக்கும் இந்த சோமாளியாதான் நமக்கு ஞாபகம் வரும் .
சோமாலியா வறுமையில் தவிக்கிறதா அல்லது வறுமை ஆக்கப்பட்டு தவிக்கிறதா???
வறுமை ஆக்கப்பட்டு தவிக்கிறது என்பதுதான் சரியான பதில் .
ஆமாம் ,சோமாலியா உலகுக்கு சித்திரிக்கப்பட்டு வருவது போல வறுமை மிக்க நாடுதான் ஆனால் வளம் மிக்க நாடு.உலகில் உள்ள இயற்கை வாயு வளங்களில் பெருமளவு வளம் கொண்ட பகுதிதான் சோமாலியா ,இயற்கை வாயு மட்டுமல்ல,எண்ணை,யுரேனியம் ஆகியன சோமாலியாவில் நிறையவே இருக்கின்றன என்பதால் மேற்கு நாடுகளும் ,அமெரிக்காவும் எப்போதும் கண் வைத்துக்கொண்டிருக்கின்றன.

இப்போது நடந்து முடிந்துள்ள சோமாலியா மாநாடு சோமாலியா மீதுள்ள அக்கறையிலா அல்லது சோமாலியாவில் உள்ள வளங்களின் அக்கறையிலா நடந்துள்ளது என்றால் பின்னால்  உள்ளதில் தான் என்பது கவலைக்குரிய பதில்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பிரிட்டனுக்கு புதிய வழி ஒன்றை கண்டுபிடிக்கும் நோக்கமாக இந்த மாநாடு அமைந்துள்ளது.
சோமாலியாவின் இந்த மாநாடும் அதன் பினாலும் உள்ள திட்டம் பற்றி பார்க்க முன் கொஞ்சம் பின் நோக்கி சொல்வோமா ??
1960 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற சோமாலியா வறண்ட ,வளம் குன்றிய பகுதியாக அப்போது கருதப்பட்டது. 1980  இன் நடுப்பகுதியில் வெளியான உலக வங்கியில் அறிக்கைகள் ,ஆய்வுகளில் சோமாலியாவில் பெற்றோலிய வளம் உள்ளாதாக கூறப்பட்டது. இதை அறிந்த அமெரிக்காவும்  களம் இறங்கியது. அமெரிக்கவின் நான்கு மிகப்பெரிய பெற்றோலிய நிறுவனங்களான கோனோகோ,அமோகோ ,செவ்ரோன் ,பிலிப்ஸ்  ஆகியன போட்டோ போட்டி போட்டுக்கொண்டு சோமாலியாவுக்குள் நுழைந்தன
.ஆனால் அப்போது பெற்றோல் இருக்கும் விடயம் வெளியே பெரிதாக உலகத்துக்கு தெரிந்திருக்கவில்லை . 1991 வரை ஆட்சியில் இருந்த சோமாலிய ஜனாதிபதி முஹம்மத் சியாத் பரீ அமெரிக்காவுக்கு வாலாட்டிக்கொண்டிருந்த போது அமெரிக்காவும் மிக மகிழ்ச்சியோடு சோமாலியாவில் களம் இறங்கியது .அப்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பெற்றோல் வர்ததகருமான ஜோஜ் புஷ்  சோமாலியா மீது தனி அக்கறை காட்டினார் . 1986 ஆம் ஆண்டில் அமெரிக்க நான்கு எண்ணெய் நிறுவனக்களும் எண்ணெய் அனுமதிப்பத்திரம்  பெற போட்டோ போட்டி  போட்டுக்கொண்டிருந்தன.
பட்டினி நிவாரணம் ,மனிதாபிமான உதவிகள் என்ற பேர்களில் அமெரிக்கா சோமாலியாவுக்குள் நுழைந்தது .பட்டினியால் வாடும் சோமாலியாவுக்கு அமெரிக்க மனிதாபிமான உதவி என்று செய்தித்தாள்களில் அப்போது நீங்கள் வாசித்திருந்தால் அது 'பச்சைப்பொய்'.
அமெரிக்காவின் அப்போதைய நோக்கம் சோமாலியாவில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதாகவே இருந்தது .
1991 ஆம் ஆண்டில் சோமாலிய ஜனாதிபதி ஆட்சி கவிழ்க்க ப்பட்டபோது அங்கு உள் நாட்டு யுத்தம் மூண்டது . பாலுக்கு பூனையாக காவல் இருந்த அமெரிக்கா ஆடிப்போனது.

சமாதானப்படை என்ற பேரில் 1992 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம்ஆம் திகதி அமெரிக்கா தனது படைகளை சோமாலியாவுக்கு அனுப்பியது . அதன் பின்னர் நாவின் வேடமும் அதில் போடப்பட்டது . அப்போதைய சோமாலிய போராட்ட தலைவர் முஹம்மது  பரா ஐதாதை பிடிக்க அமெரிக்கா பல முயற்சி எடுத்தது . விளைவு பல ஆயிரம் நா துருப்புக்கள் கொல்லப்பட்டார்கள் .கொல்லப்பட்டது மட்டுமல்ல சித்திரவதை செய்யப்பட்டு கொடூரத்தனம் செய்யப்பட்டனர் . மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் குண்டு வீசி மக்களை கொன்று கொண்டிருந்த ,அமெரிக்க , நா துருப்புகள் மீது மக்களுக்கு  ஆத்திரம் கூடிக்கொண்டிருத்து .
1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா அதி விசேட பயிற்சி பெற்ற 400 அதிரடி துருப்புகளை ஐதாதை பிடிக்க சோமாலியாவின் தலைநகருக்கு  வான் மூலம் இறக்கியது . ஹோலிவ்வூடின் படம் ஒன்றை காட்டுவது போல மிக இலேசாக அவரை பிடிக்கலாம் என்று தப்புக்கணக்கு போட்டது அமெரிக்கா . அனுப்பப்பட்ட படையின் பெயர் டெல்டா போர்ஸ் (delta force ) அமெரிக்கா தனது வல்லமையை தனது படைகளின்  வல்லமையை காட்ட நல்ல தருணம் என்று எண்ணியிருத்து. நடந்து என்ன தெரியுமா ???
..விமானங்கள் மூலம் இறக்க்கப்பட்ட அமெரிக்க துருப்புக்கள் கண்டதுண்டமாக போராளிகளால் சுடப்பட்டார்கள் ,சித்திரவதை செய்யப்பட்டார்கள் ,இறந்த அமெரிக்க படைகளின் உடல்கள் போராளிகளின் ஜீப் வண்டிகளில் வைத்து கட்டி இழுக்கப்பட்டு நகர் வலம் கொண்டு செல்லப்பட்டன . இது அமெரிக்க தொலைக்காட்சியான  சி என் என்னில் காட்டப்பட்டபோது அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சி அலைகள் பரவியது. நாடே அசந்து போய் அச்சத்தில் உறைந்து போனது. தமது மகனை கணவனை ,சகோதரனை இராணுவ வீரனாக அனுப்பியவர்கள் அதிர்ந்து போனார்கள். ஆடிப்போன அமெரிக்கா ஐதாதை பிடிப்பதை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிக்க வழி பார்த்தது . 400 பேரில் அதிகமானோர் இறந்த போதும் அமெரிக்க கணக்கில் 18 இராணுவ வீரர்கள் மட்டுமே உயிரிழந்தார்கள் என்று உலகுக்கு கூறப்பட்டது .இறந்தவர்களின் அளவை குறைத்து அவமானத்தின் அளவை அமெரிக்கா குறைத்துக்கொண்டது . உடனடியாக அங்கிருந்து வெளியேறிய அமெரிக்கா அந்த பக்கம் இன்று வரை தலை வைத்துக்கூட பார்க்கவில்லை .இந்த சம்பவத்தை வைத்து black hawk down என்ற பிரபல அமெரிக்க படமும் தயாரானது தெரிந்ததே
பெற்றோலும் வேண்டாம் வாயுவும் வேண்டாம் என்று அங்கிருந்து வெளியேறிய அமெரிக்க படைகள் இன்று வரை அந்தப்பக்கம் செல்லவில்லை . ஆக ஆபிரிக்க யூனியன் படைகளை  வைத்தே தமது காயை இப்போது நகர்த்திக்கொண்டிருகிறது  அமெரிக்கா .
அது  பழைய கதை ..இப்போது புதிய கதைக்கு வருவோம்
கடந்த 17 வருடமாக மேற்கு நாடுகள் எட்டிக்கூட பார்க்காத சோமாலியாவை இப்போது நடந்துள்ள மாநாடு  மூலம் மேற்கு நாடுகள் விசேடமாக பிரிட்டன் மீண்டும் தமக்கு உள்ள அக்கறையை இப்போது காட்டியுள்ளன .ஆனால் சோமாலியாவில் உள்ள வளத்தில் அக்கறை என்று அம்மணமாக சொல்வதை  விட்டு விட்டு ஸ்திரப்பாடு ,அபிவிருத்தி ,மனிதாபிமானம் என்று கதை  விட்டுகொண்டிருகின்றார்கள் .
உலக வங்கியின் அறிக்கையின் படி சோமாலியாவில் 10 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் உள்ளதாக கூறுகின்றது . சுமார் 200 மில்லியன் சதுர அடி அளவான இயற்கை வாயு உள்ளதாக கூறுகின்றது
சோமாலியாவில் பலமாக  கால் பதித்துள்ள அல் -ஷபாப் அமைப்பு சோமாலிய மக்களின் ஆதரவை பெற்ற இயக்கம் .ஆனால் மேற்கு நாடுகளை பொறுத்த வரையில் அது ஒரு பயங்கர வாத இயக்கம் . சோமாலியாவின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அந்த இயக்கத்துக்கு எதிராக நேராக மோத அஞ்சும் மேற்கு நாடுகளும் ,அமெரிக்காவும் ஆபிரிக்க யூனியன் படைகளையும், எதியோப்பிய படைகளையும் வைத்து அல் ஷபாப்  போராளிகளிடம் இருந்து சோமாலியாவை பிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளன.சோமாலியாவின் வட பகுதியிலேயே இந்த வளங்கள் காணப்படுவதாலும் ,வட பகுதி அல் ஷபாப் போராளிகளின் கையில் இருப்பதால் வளங்களை சுதந்திரமாக சுரண்ட முடியவில்லை .இதனால்தான் இந்த மாநாடு .
இது குறித்து பிரிட்டனின் பாராளுமன்ற  உறுப்பினரும் யுத்தத்துக்கு எதிரான அமைப்பின் உறுப்பினருமான ஜெரேமி கார்பின்  சொல்வது என்ன தெரியுமா "நீண்ட கால இராணுவ திட்டம் வகுக்கப்படும் போது புவியியல் முதலிலும் ,அரசியல் இரண்டாவதும் கருத்தில் எடுக்கப்படுகின்றன.சோமாலியா மீது வகுக்கப்பட்டுள்ள இந்த தந்திரோபாய நோக்கம் வேறாக உள்ளது "
சோமாலியாவை தோல்வி அடைந்த நாடு என்று கூறியுள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரூன்.
பாகிஸ்தானுக்கு அடுத்ததாக பயங்கரவாதிகள் அதிகம் பயிற்சி பெரும் நாடு சோமாலிய என்று கூறுகிறார் பிரிட்டனில் உளவு அமைப்பான எம் -15 இன் தலைவர் ஜோனதன் எவான்ஸ்
"சோமாலியா பிரிட்டனுக்கு நேரடி அச்சுறுத்தல் உள்ள நாடு .அங்கு உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்.மனிதாபிமான நடவடிக்கை எடுப்பது அவசியமானது .சோமாலியாவில் உள்ள அல் ஷபாப் படையில் பிரிட்டிஷ் கடவுச்சீட்டு உள்ள சோமாலியர்கள் சேர்கிறார்கள் "என்கிறார்  பிரிட்டனின்  சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அன்றூ மிட்செல்
இதெல்லாம் சோமாலிய மீது  மூக்கை நுழைக்க முன்னரான காற்று அடித்து பெருப்பிக்கும் முயற்சி என்று மட்டும் தெரிய வருகிறது
இங்கு குறிப்பிட்டாக வேண்டிய இன்னொரு விடயம் கடல் கொள்ளை . சோமாலியாவில் கொடி  கட்டிப்பறக்கும் கைத்தொழில் கடல் கொள்ளை .கடல் கொள்ளை இடம் பெறுவது மேற்கு நாடுகளை எரிச்சலடைய வைத்துள்ளது . அண்மையில் பல எண்ணெய் தாங்கி கப்பல்கள் கடத்தப்பட்டமை ,உல்லாச பயணிகள் கடத்தப்பட்டமை போன்றன மேற்கு நாடுகளை உசுப்ப வைத்துள்ள விடயங்கள் .ஐரோப்பாவுக்கான மூன்றில் ஒரு பகுதி எண்ணெய் விநியோகம் இந்து சமுத்திரம் ஊடாகவே வருகிறன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த கடல் கொள்ளை பிரபல்யம் அடைந்தமைக்கான காரணம்தான் என்ன ?
மேற்கு நாடுகள் தமது கழிவுகளை,அணு கழிவுகளை  ,அண்மைக்காலம் வரை சோமாலிய கரையோர பகுதியில் கப்பல்கள் மூலம் கொட்டி வந்தன .கேட்பதற்கு நாவில் அங்கத்தவம் வகிக்கும் அரசாங்கம் இல்லை என்ற துணிவில் இடம் பெற்று வந்த இந்த செயல்கள்  பல்லாயிரம் சோமாலிய மீனவர்களின் வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளதால் வாழ வேறு வழி தெரியாமல் அவர்கள் கடல் கொள்ளையில் ஈடு பட்டு வருகின்றனர்
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்த செயலால் ஆத்திரம் அடைந்துள்ள சோமாலிய கரையோர மக்கள் கடல் கொள்ளையை இப்போது நம்பி வாழ்க்கை நடத்த பழகி விட்டார்கள்
இப்போது லண்டனில் நடைபெற்றுள்ள சோமாலிய தொடர்பான மாநாட்டில் அனைத்து தரப்பும்  அழைக்கப்பட்டுள்ள போதும் அல் ஷபாப் அழைக்கப்படவில்லை .அல் -குவைதாவோடு தொடபு உள்ளதால் அது அழைக்கப்படவில்லை என்று மாநாட்டை கூட்டிய தார்மீக வாதிகள் கூறுகின்றனர்
சமாதான முத்து ,அமெரிக்க சொத்து, ஹில்லரி ஹிலிண்டன் இப்படி பேசியுள்ளார்
"அல் குவைதாவுடன் தொடர்பு உள்ளதால் அல் ஷபாப் சமாதான அணியில் இல்லை என்பது புலப்படுகிறது .அல் ஷபாப் அமைப்பை விரட்டி அடிக்க அனைத்து நாடுகளும் ஓன்று திரள வேண்டும்."
இந்த மாநாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள அல் ஷபாப்
"இது போன்ற மாநாட்டை கூட்டி நேரத்தையும் ,பணத்தையும் வீணடிக்காதீர்கள் . இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை .ஏற்கனவே அமெரிக்காவுக்கு பாடம் படிப்பித்துள்ளோம். ஆப்ரிக்க  நாடுகளுக்கு பாடம் படிப்பித்துக்கொண்டிருக்கிறோம் .இதில் இனி யார் வந்து என்ன செய்யப்போகிறீர்கள் . இன்ஷா அல்லாஹ் எந்த படை வந்தாலும் அதை எதிர் கொள்வோம் " என்று தெரிவித்துள்ளது
வளர்ந்து வரும் இஸ்லாமிய வாதம் எங்கிருந்தாலும் அழிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக சோமாலியா மீது இன்னொரு இராணுவ நடவடிக்கை எடுக்க மேற்கு நாடுகள் தாயாராகி வருகின்றன என்பது மட்டும் தெரிகிறது
ஒரு பக்கம் வளம் எடுக்கும் சந்தர்ப்பம் ,மறு பக்கம் வளர்ந்து வரும் இஸ்லாமிய ஆட்சியை ஒழிக்கும் சந்தர்ப்பம்  என சோமாலியா மீதான இன்னொரு இராணுவ தலையீடு ஆரம்பமாகிகொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை
பாலஸ்தீனம் ஆப்கானிஸ்தான் ,ஈராக் , சிரியா ஈரான் என்று தொடரும் வரிசையில் சோமாலியாவும் இப்போது இணைந்துள்ளது
யா அல்லாஹ் முஸ்லீம்களை பாதுகாப்பாக
ஆமீன்