இன்று ஜெரூசலத்தில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் முஸ்லீம்களுக்கும் இஸ்ரேலிய பொலிசாருக்குமிடையே மீண்டும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது
ஜும் ஆ தொழுகை முடிந்து வெளியேறிய முஸ்லீம்களை இஸ்ரேலிய பொலிசார் முஸ்லீம்களை தாக்கினர் . முஸ்லீம்களும் இஸ்ரேலிய பொலிசாரை தாக்க முற்பட்டனர் .
இதையடுத்து ஏற்பட்ட கைகலப்பில் 11 இஸ்ரேலிய பொலிசாரும் 15 முஸ்லீம்களும் காயமடைந்துள்ளனர் . நான்கு முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்த கைகலப்பு எவ்வாறு தோன்றியத் என்பது உடனடியாக தெரியவில்லை
அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் நுழைய முற்பட்ட இஸ்ரேலிய பொலிசார் மீது தமது செருப்பை கழற்றி பெண்களும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது
இந்த வாரம் அல் அக்ஸா பள்ளிவாசலில் பலதடவை கைகலப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
அய்யாஷ்




