பெண் என்று அறிந்தாலே ஆண்கள் காமப் பேச்சுக்களைப் பேசுகின்றார்கள். (குறிப்பாக முஸ்லிம் பெயர் தாங்கிய பல ஆண்கள்) என்று கருத்துத் தெரிவித்த சகோதரிக்கு மனம் திறந்த ஒரு மடல்.
அன்பின் சகோதரிக்கு,
அண்ட சராசரங்களையும் திட்டமிட்டுப் படைத்து, பரிபாலிக்கும், மனிதனுக்குள் உணர்ச்சியையும், உறவுகளையும் கொடுத்து மனிதனாக வாழ வைக்கும் அந்த ஒருவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன் நலம் தானா?
உங்கள் மனக் குமுறல்களை படம் பிடித்துக்காட்டிய உங்கள் comments களை பார்க்கக் கிடைத்தது.ஒரு வகையில் உங்களது ஆதங்கமும் நியாயமானதே. ஒரு குறித்த சமூகம் உங்களை நாடி வந்து உங்களைக் காயப் படுத்தி உங்களது உணர்வுகளை கலங்கப் படுத்தி இருந்தால் அந்த சமூகம் சார்பாக முதலில் நான் மன்னிப்புக் கேட்கக் கடமைப் பட்டுள்ளேன். நீங்கள் கோடிட்டுக் காட்டிய சில விடயங்களைப் பற்றி மனம் திறந்து பேசலாம் என்று நினைக்கின்றேன் அதே நேரம் என் வார்த்தைப் பிரயோகங்கள் உங்களைக் காயப் படுத்துமிடத்து சுட்டிக்காட்டுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் கூறிய விடயங்களில் குறிப்பாக “பெண்களிடம் காமம் சார்ந்த பேச்சுக்களைப் பேசுபவர்களைப் பற்றி முதலில் பேசலாம்......... இந்த சமூக வலைப்பின்னலில் உங்களுடன் அதிகமாக இணைத்திருப்பது ஆண்கள் தான் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதிலும் குறிப்பாக முஸ்லீம் சகோதரர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமோ என்னமோ..
Face book friends என்பது ஒரு sunglass போல நாம் போடும் sunglass நிறத்திற் கேட்ப தனது செயட்பாடுகளை மாற்றிக் கொள்ளும்.அல்லது தனது விருப்பு வெறுப்புக்களுக் கேட்ப sunglass களைப் போட்டு உலகத்தைப் பார்க்கும். சிலர் நிஜ வாழ்க்கையில் நடத்த, கேட்க பார்க்க முடியாதவற்றை Face book மூலமாக நிறைவு செய்து கொள்வார்கள். (அதாவது இரட்டை வேஷம் போடுவார்கள்) சிலர் எப்போதும் ஒன்று போல இருப்பார்கள்).
இதில் இரட்டை வேஷம் போடுபவர்கள் தான் அதிகமாக பெண்களைத் தேடித்தேடி தம்முடன் இணைத்துக் கொள்வார்கள்: சில வேளை அவர்களுக்கு ஆண் நண்பர்களே இருக்காது. (சில பெண்களும் இப்படி இருப்பார்கள்).
இன்னும் சிலர் எந்த வரையரையுமின்றி எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்வார்கள், பிற்காலத்தில் கைசேதப் படவும் செய்வார்கள்.
சிலருக்கு அதிகமான நண்பர்கள் இருப்பது பெருமையான விடயம் அதற்காகவே இணையத்தில் தேடியெடுத்த பெண்களின் படங்களைப் பாவித்து நண்பர்களை தேடுவார்கள்......
இதுவெல்லாம் பலதரப் பட்ட மனிதர்களின் பண்பு.. நாய் வாலை நிமிர்த்த முடியாதது போல சிலரின் பிறப்புக் குணத்தை அவர்கள் நினைத்தாலேயன்றி மாற்ற முடியாது.
இப்படி பல்வேறுபட்டவர்கள் இருக்கும் இடத்தில்
காமம் என்பது முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் என்று வகைப் படுத்தப் பட்ட ஒரு உணர்வல்ல.
எல்லோருக்கும் இருக்கும் ஒரு உணர்வு தான் அது.. எல்லோருக்கும் பசிப்பது போல கோபம் வருவது போல ... கவலை வருவது போல இதுவும் ஒரு உணர்வு தான் ... இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் குறிப்பாக இஸ்லாத்தில் உணர்வுகளை கட்டுப் படுத்தும் வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளது தான்
உதாரணமாக:
• திருமண வயத்தை அடையும் போது திருமணம் செய்தல் .
• திருமணம் முடிக்க முடியாது என்ற நிலை இருக்கும் போது நோன்பிருந்து உணர்வுகளைக் கட்டுப் படுத்தல்.
• திருமணம் மூலம் தனது தேவைகளைப் பூரணப் படுத்திக் கொள்ளல்.
• ஒருமனைவியால் தனக்கு திருப்தி ஏற்படாவிட்டால், ஹலாலான முறையில் இன்னொரு திருமணம் செய்தல்.
(பலதாரமனத்தின் நன்மைகளில் இதுவும் ஒன்று)
இப்படி உணர்வுகைக் கட்டுப் படுத்த தவறியவர்கள் தான் ஆங்காங்கே காணும் பெண்களை தவறாகப் பயன் படுத்துகின்றார்கள் இதற்கு ஜாதி மதம் என்ற பேதமெல்லாம் இல்லை சகோதரியே....
ஆனால் இப்படி அழகாக தனது தேவைகளைப் பூரணப் படுத்தவும், உணர்வுகளை செம்மைப் படுத்தி உபயோகிக்கவும் கற்றுத்தந்த இந்த புனித மார்க்கத்தில் இருந்து கொண்டு காதல் காமம் என்று தறி கேட்டுத்திரியும் அந்த முகம் தெரியாத கூட்டத்தின் மீது உண்மையிலேயே கோபம் கோபமாக வருகிறது.
துஷ்டனைக் கண்டால் தூர விலகச் சொல்வார்கள். அது போல நானும் சொல்கிறேன் தூர விலகுங்கள்.இனி அடுத்த பக்கத்தைப் பார்ப்போம் ....
உங்களிடம் காமப் பேச்சு பேசக் காரணம் என்ன ? நானும் ஒரு பெண் (பெண் சாட்சி என்று தானே பெயர் கூடப் போட்டிருக்கிறேன்) ஆனால் எனக்கு உங்களைப் போன்ற அனுபவம் ஏற்படவில்லையே அதற்குக் காரணம் என்ன?
நான் தேடித் பிடித்த காரங்களைச் சொல்கின்றேன் கொஞ்சம் சரியா தவறா என்று சிந்தித்து விட்டுச் சொல்லுங்கள்.
1. உங்களது புகைப் படம்.
உங்களது புகைப் படம்தான் உங்களைப் பிரதி நிதித்துவப் படுத்துகின்றது. அதே நேரம் உங்களப் பற்றி ஏடா கூடமாக சிந்திக்கவும் செய்கின்றது. கம்புக்கு சேலை கட்டினாலும் திரும்பிப் பார்க்கும் இந்த காலத்தில் நீங்கள் உங்களின் பெண்மையை கட்டுகிண்றீர்களே இது விளம்பரம் போலல்லவா இருக்கின்றது. என்னைப் பார் ஏன் அழகைப் பார் .. என்பதாகத்தான் தெரிகிறது. சிலவேளை நீங்கள் உங்கள் தொழில் துறை ஆடை அணிந்திருந்தால் இவ்வளவு நண்பர்களும் இணைந்திருப்பார்களோ என்னவோ...... எது எப்படியோ உங்கள் புகைப் படமும் உங்களுடன் தவறாகப் பேச வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்று நினைக்கின்றேன்.
2. கண்டவர்களையும் இணைத்துக் கொண்டமை.
நான் முதலிலே சொன்னது போல சிலர் பெண்களின் புகைப் படங்களைப் பாவிப்பவர்களை மட்டும் தேடித்தேடி இணைத்துக் கொள்வதைக் காண்கின்றோம், அப்படியான சிலரை உங்கள் நண்பர்கள் கூட்டத்திலும் கண்டேன். உங்களுடன் தவறாகப் பேச அதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
3. பெண்ணுரிமை சுதந்திரம் என்ற பெயரில் நட்புக்களை உருவாக்கிக் கொண்டமை.
• நட்பு?
• யாரெல்லாம் நண்பர்கள்?
• நண்பர்களின் பண்பு.
• சமகால நடப்புக்கள்.
என்பனவற்றை பெரிதாக சிந்திக்காமல் நண்பர்கள் என்று சொன்னவுடன் ஆண்டாண்டு பழகியவர்களைப் போல நடக்க ஆரம்பித்தல்.
அன்னியவர்களுடன் வைக்கும் தொடர்புகளின் விபரீதங்கள் இன்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை கண்கூடாகக் காண்கின்றோம் .....
இப்படி நாகரீகமும், தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் அனுபவ முதிர்ச்சியும் உள்ள நிலையில், உங்களைப் பார்த்தால் வெளிச்சத்தை தேடும் விட்டில் பூச்சியாய் தோன்றவில்லை எனக்கு.
இதோ சில வழிகளை சொல்கிறேன் முயற்சித்துப்பாருங்கள் அதன் பின்னும் ஆண்கள் உங்களுடன் அதே மாதிரி நடக்க முயன்றால், தேவையற்ற விடயங்களை பகிர முயன்றால், கேவலமாக Skype video chat போன்றவற்றிற்கு அழைக்க முயன்றால் சொல்லுங்கள் இன்னொரு வழியைத் தேடித் பிடித்து, அதை தடுப்போம்.
• உங்களது சொந்தப் புகைப் படத்தை மாற்றி வேறேதாவது உபயோகியுங்கள்.
• உங்கள் துறைசார் (தொழில்) கருத்துக்களை பரிமாறுங்கள்.
• நண்பர்கள் அனுப்பும் அழைப்புக்களை மீள்பரிசோதனை செய்து விட்டு இணைத்துக் கொள்ளுங்கள்.
• நண்பிகளைத் தாராளமாக இணையுங்கள்.(குறிப்பு இன்று பெண்கள் பெயரில் உலா வரும் ஆண்களும் இருக்கின்றார்கள் அவதானமாக இருங்கள்.)
• யாராவது Chat இட்கு வந்தால் அவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு தொடருங்கள்.
• தவாறாக பேச வருபவர்களை ஒரே முறையில் block or remove பண்ணுங்கள்.
இதில் நான் கூறியவற்றை நடை முறைப் படுத்திப் பாருங்கள் ஒரு நல்ல நண்பர் கூட்டம் கிடைக்கலாம்.
என் மடல் நீண்டு கொண்டே போகிறதே என்று அலுப்பாக இருக்கிறதா இதோ இத்துடன் ஒரே ஒரு விடயத்தை மட்டும் கூறி விட்டு முடித்துக் கொள்கிறேன்.
“சேலை முள்ளில் பட்டாலும் முள்ளு சேலையில் பட்டாலும் சேலைக்குத்தான் நஷ்டம்” அது போல தான் பெண்களின் நிலையும்.... அதனால் தான் பெறும்பாலான எச்சரிக்கைகள் பெண்களை மையமாகக் கொண்டு அமைகின்றன. பெண்களை மையமாகக் கொண்டு அமைத்து விட்டதனால் அது ஆண்களுக்கு இல்லை என்று அர்த்தம் கற்பிக்க யாராவது முன்வருவார்கள் என்றால் அது விதண்டாவாதமும் முட்டாள்தனமுமாகும்.
சகோதரி, சில வேளை நாங்களே சில பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கொண்டிருப்போம், இங்கும் அதே நிலை இருப்பதை உணர்கிறேன். நீங்கள் சிரத்தை எடுத்தால் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்.. நீங்கள் கோடிட்டு உங்கள் உலக குமுறல்களைச் சொன்னீர்கள் நான் என் அபிப்பிராயங்களையும் நான் கண்ட தீர்வுகளையும் சொன்னேன் ஏதாவது மனச்சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு கூறி விடை பெறுகின்றேன்.
அன்புடன்
பெண் சாட்சி