மானங்கெட்ட
தலைமத்துவங்க்களால்
மதி கெட்டுப்போய்
உதிரம் கொட்ட
உயிருடன்
வேட்டையாடப்படும்
உடன் பிறக்காத
உறவுகள் வாழும்
பாலஸ்தீன பூமியின்
அயலவர்கள் இவர்கள்
ஜெரூசலத்தின் சிங்கம்
சலாஹுடீனின் பரம்பரையில்
உதித்து
வெருண்டு போன
பெட்டைக்கோழி களாகி விட்ட
அந்த அரபு தலைவர்களிடம்
தெரிந்தன வீரம்
மீசைகளிலும்
சாயம் பூசப்பட்ட தாடிகளிலும்...
அல்ல்லாஹ்வை விட்டு
அமெரிக்காவுக்கும்
அணு குண்டுகளுக்கும் அஞ்சும்
அந்த கோழைப்பயல்களின்
கோமனங்கலில்
வீர வாள்களின்
சின்னங்கள்
செம்மறிகலாகிப்போன
அந்த
சமூக தலைவர்கள்
தம்மைத்தாமே
அழைத்துக்கொண்டார்கள்
சிங்கங்கள் என்று
சீறத்தெரியாமல் .....
கத்தி எடுத்து
கதிர் வெட்ட அஞ்சும்
அந்த
கபோதிப்பயல்களின்
கஜானாக்களில்
எப் 16 களும் எ கே 47 களும்
துருப்பிடித்தபடி...
இரண்டு ஹோஸ்னி முபரக்குகள்
போதும்
இருபது கோடி
பிஞ்சுகள்
இஸ்ரேலிய குண்டுகளால்
மொட்டாக முன்னே
கருக்கி கல்லறையாக்கப்பட ....
வெருண்டு போய்
சரண்டர் ஆன
வேங்கை த்தோல் போர்த்திய
வெகுளி அப்துல்லாவும்
எதிரியை சகலனாக்கிய
எகிப்திய ஹோஸ்னி முபாரக்கும்
காசாவின் ஓலக்குரல்களின்
அண்டை வீட்டு சிற்பிகள்..
துருக்கிய க்கப்பல்
துகில் உரிக்கப்படும் வரை
அந்தப்புரத்தில்
தூக்கத்தில் இருந்தார்கள்
அந்த
வீர வாள் (ல்)கள்
அண்டை நாட்டு
மாற மண்டைகளுக்கு
எட்டாத
காசாவின் அந்த
ஒப்பாரியும் ஓலமும்
ஐரோப்பாவுக்கு
கேட்டன
கடல் கடந்து...
ஒ ஐ சி அவசர கூட்டம் போட்டது
துயிர்த்த துருக்கிய
தியாகிகளுக்கு
எப்போது பன்னீர்
தெளிப்பது என்று பேச.....
அவசரமாக
கூடியது அரபு லீக்
அனைத்து உலகுக்கும்
பயம் காட்ட ...
பல் பிடுங்கப்பட்ட
பாம்புகளை வைத்து
கண்டனதீர்மானம்
நிறைவேற்றி....
ரோமிலும் லண்டனிலும்
பாரிசிலும் ஆர்ப்பாட்டம்
வெடித்த போது
ரியாத்திலும் அம்மானிலும்
'ஆயிஷ்ஷா ......'
உரத்து ஒலித்தது
காலித்தின் குரலில் ...
அரபு தலைவர்களே
முஸ்லிம் தலைவர்களே
முறுக்கிய மீசைகளையும்
செதுக்கிய தாடிகளையும்
மழித்து விட்டு
'நிக்காப் ' களை போடுங்கள் !
மானம் கெட்ட பிறகு
மன்னர் வேசம் எதற்கு ??????