இந்த சைபர் பிரிக்கேட்டின் பேஸ் பங்களாதேஷின் ஏதோ ஒரு நதிக்கரை ஓரமாக இருக்கலாம். அல்லது அதில் மிதக்கும் தோணிகளாக கூட இருக்கலாம். ட்ரொன்களால் ஒன்றும் செய்ய முடியாத மேற்கின் நவீன எதிரிகள் இவர்கள். புரியவில்லையா! கீழே வாருங்கள்...
பங்களாதேஷ் அரசு எகிப்திய பாணியில் இஸ்லாமிய இயக்கங்களை தடை செய்ததும், மதரஸாக்களில் தேடுதல் வேட்டைகளை நடாத்தியதும், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பலரை சிறையில் அடைத்ததும் இதற்கெல்லாம் மேலாக இரண்டு இஸ்லாமிய இயக்கத்த தலைவர்களை சிறையில் தள்ளி அதில் ஒருவரிற்கு கபிடல் பனிஸ்மென்ட் வழங்கியதும், மற்றையவர் லைப் சென்டன்ஸில் அண்மையில் சிறையிலேயே மரணமாகியதும் செய்திகள் வாயிலாக நாம் அறிந்த உண்மைகள். அறியாத உண்மைகள் தான் என்ன? பங்களாதேஷ் ஜமா-அதே இஸ்லாமியின் இளைஞர் விங் Bangladesh Islami Chhatra Shibir. அரசியல் மயப்படுத்தப்பட்ட அணி. வங்கதேச விடுதலை போரின் முன் Islami Chattara Shangha என அழைக்கப்பட்டது. டாக்கா யுனிவர்சிட்டி மாணவர்களால் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து பிரிந்த போது கிழக்கு பாகிஸ்தான் என்றும் மேற்கு பாகிஸ்தான் என்றும் இரண்டு தேசங்களில் பாகிஸ்தானாக பரிணமித்தன. வங்க தேச விடுதலையின் பின்னர் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என அறிமுகமாகியது. பாகிஸ்தான் ஜமா அதே-இஸ்லாமி ஸ்தாபகர் மௌலான மௌதூதியின் கருத்தின்பால் ஈர்க்கப்பட்ட வங்கதேச இளைஞர்களை பாகிஸ்தானிய உளவமைப்பு (அப்போது ஐ.எஸ்.ஐ. செயற்படவில்லை. பாகிஸ்தானிய இராணுவ உளவுப்பிரிவே அனைத்தையும் ஹேண்டில் பண்ணியது) சரியாகவே பயன்படுத்திக்கொண்டது. இதன் காரணமாக பாகிஸ்தானிய வெளிவிவகார கொள்கைகளிற்கு எதிராக இந்திய அரசுடன் இணைவு போக்கை கடைப்பிடித்த வங்கதேச தலைவர்கள் பலர் தங்கள் நாட்டிலேயே கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை பாகிஸ்தானிய இராணுவ உளவுப்பிரிவு ஏஜென்ட்கள் இந்த Islami Chhatra Shibir இளைஞர்களை கொண்டே நிறைவேற்றிக் கொண்டனர். அப்போது இதன் தலைவர்களாக இருந்து பின்னர் பங்களாதேஷ் ஜமா அதே-இஸ்லாமியின் தலைவர்களாக மாறியவர்களையே இப்போது வங்கதேச அரசு விசாரணை என்ற பெயரில் பொய் வழக்குகளை நடாத்தி உள்ளே தள்ளி வருகிறது. பங்களாதேஷ் அரசிற்கு இதனை இப்போது ஏன் செய்ய வேண்டும் என எழும் கேள்வி நியாயமானதே.
இது தான் அதற்கான விடை.. Ansarullah Bangla Team (ABT). இந்த அமைப்பு பற்றி அமெரிக்க உளவமைப்புக்கள் பல எச்சரிக்கைகளை பங்களாதேஷ் அரசிற்கு தெரியப்படுத்தியுள்ளன. மிகப்பெரும் ஆதரவாள்கள் தளத்தை இது கொண்டுள்ளதென்றும், இது அல்-காயிதாவின் செயற்பாட்டாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளது என்றும் அந்த எச்சரிக்கையில் சில வாசகங்கள் அடங்கியிருந்தன.
பங்களாதேஷ் பொலீஸார் இவர்களை Islami Chhatra Shibir-யின் புதிய வடிவம் என பயங்கரவாத முத்திரையை குத்தியுள்ளனர். இன்னொரு புரத்தில் பார்த்தால் இந்த அன்சாருல்லாஹ் பங்ளா டீம் என்பது பங்களாதேஷ் ஜமா அதே-இஸ்லாமியின் மாணவர் அமைப்பின் உருப்பினர்களேயே பெரும்பாலும் தன் வசம் கொண்டுள்ளது. ஆக வரலாற்று தொடர்புகள் எல்லாமே ஒரு தளத்தில் இருந்து உருவாகியுள்ளமை இதில் இருந்து தெளிவாகும் விடயமாகும். 2007-ல் இவர்கள் தங்கள் நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆரம்பித்திருந்தனர். ஜமா அதே-முஸ்லிமீன் என்ற பெயரில் ஜமா அதே-இஸ்லாமியில் இருந்து பிரிந்து இயங்கிய மாற்றுக் குழுவே இப்போது தங்களை அன்சாருல்லாஹ் பங்ளா டீம் என வெளிப்படுத்தியுள்ளனர். “அன்வர் அல்-அவ்லாக்கியின்” கருத்துக்களினால் பெரிதும் கவரப்பட்ட இவ்வணியினர் சர்வதேச இஸ்லாமி போராட்ட குழுக்களுடன் தொடர்புகளை பேணுவதுடன் அவர்களிற்கு உதவும் சப்ளை பொட்டாகவும் தங்களை மாற்றியுள்ளனர்.
பங்களாதேஷ் அரசு இவர்களை தடைசெய்துள்ளதுடன் இந்த அமைப்பை பயங்கரவாதிகள் இயக்கம் என்றும் அறிவித்துள்ளது. பங்களாதேஷில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பிரச்சார பணிகளை மேற்கொண்டு அதனை தம் வசப்படுத்தி இஸ்லாமிய பிராந்தியங்களாக விஸ்தரிக்கும் மிக நீண்ட திட்டம் இவர்கள் வசம் உள்ளது, முப்தி ஜஸீமுத்தீன் ரஹ்மானி தலைமையில் 50 பேரளவிலான குழுவினர் பர்குனா எனும் தென்மேற்கு பிரதேச மாவட்டத்தில் தங்களிற்கான தளத்தையும் அதற்கான மஸ்ஜித்தையும் நிறுவியுள்ளனர். வங்க அரசு பயப்படுகிறது. அதன் இன்றைய தேசிய வருமானமே வெளிநாட்டு கம்பனிகளின் முதலீடுகள். அதனால் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் அப்துல் நாஸர் பாணியில் அல்லது இன்றைய ஜெனரல் சீசியின் பாணியில் சட்-டவுன் பண்ண பார்க்கிறது. இப்போது நிலைமைகள் தலைகீழாக மாறி வருகின்றன. அல்-காயிதா ஆதரவுத் தளம் மெல்ல இஸ்லாமிய அரசிற்கான ஆதரவுத்த தளமாக மாறி வருகிறது. இந்த நிலை நீடிக்குமானால் இந்திய உப-கண்டத்திற்கான ஐ.எஸ்.ன் விலாயத்தாக பங்களாதேஷின் நிலங்கள் மாறிவிடும்.





