“ஈரானைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஹாக்கர்கள் போலியான பேஸ்புக் ஐடிகள்,
மற்றும் போலி இணையதளங்களை உருவாக்கி, அதன்மூலம் அமெரிக்க மற்றும்
வெளிநாட்டு வி.ஐ.பி.கள் தொடர்பான தகவல்களை திருடுகிறார்கள்“ என்று
கூறியுள்ளது, அமெரிக்க சைபர் இன்டெலிஜென்ஸ் நிறுவனம்.
அமெரிக்கா டல்லஸில் இருந்து இயங்கும் ஐசைட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின்
எக்ஸெகியூட்டிவ் வைஸ் பிரெசிடென்ட் டிஃபனி ஜோன்ஸ் இது தொடர்பாக Reuters
நியூஸ் ஏஜென்சிக்கு அளித்த பேட்டியில், இந்த தகவலை தெரிவித்திருந்தார்.
அமெரிக்க
கடற்படையை சேர்ந்த நான்கு நட்சத்திர அட்மிரல் ஒருவர், அமெரிக்க
அரசியல்வாதிகள், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் ஆகியோருடன்,
பிரிட்டன், சவுதி அரேபியா, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளின்
வி.ஐ.பி.கள் தொடர்பான தகவல்களும், ஈரானிய ஹாக்கர்களால் திருடப்பட்டுள்ளன
என்றும் அவர் தெரிவித்தள்ளார்.
ஆனால், பாதிக்கப்பட்ட யாருடைய பெயரையும் வெளியிட இந்த நிறுவனம் மறுத்துவிட்டது.
போலி பேஸ்புக் ஐடிகள், மற்றும் போலி செய்தி இணைய தளங்களை உருவாக்கியுள்ள
ஹாக்கர்கள், தாம் குறி வைத்துள்ளவர்களை அந்த தளங்கள் மற்றும் பேஸ்புக்
பக்கங்களுக்கு வருமாறு செய்கிறார்கள். அதற்காக நீண்ட காலம் முயற்சி
செய்யும் ஹாக்கர்கள், சிறிது சிறிதாக தமது முயற்சியில் வெற்றி
பெறுகிறார்கள்
குறி வைக்கப்பட்டவர்கள் அந்த தளங்களுக்கு வந்தவுடன், அவர்கள்
உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களுக்குள் இவர்களால் செல்ல ஒரு வழியுள்ளது
என்றும் கூறுகிறது, ஐசைட் பார்ட்னர்ஸ் நிறுவனம்.
இந்த தந்திரம் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்தும் நடக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.






