எகிப்துக்கு ரஷ்யா வழங்கும் மிகப் பெரிய ஆயுத சப்ளை



விபரம் அறிந்த வளைகுடா ஆயுத விற்பனை வட்டாரங்களில் இருந்து, ரஷ்யாவும், எகிப்தும் மிகப்பெரிய ஆயுத டீல் ஒன்றை செய்து கொண்டிருப்பதாக தெரியவருகிறது.


மிகப்பெரிய என்றால், 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் கைமாற போகின்றன!

எகிப்திய ராணுவம், கடந்த 40 ஆண்டுகளில் பெற்றுக் கொள்ளப்போகும் மிகப் பெரிய ஆயுத சப்ளை இதுதான்!

பொருளாதார நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் எகிப்தால், ஆயுதங்களுக்காக இவ்வளவு பணம் செலவு செய்ய முடியுமா?

எகிப்து, தனது பாக்கெட்டில் இருந்து பைசா கொடுக்கவில்லை என்கிறார்கள்.

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த ஆயுதங்களின் பில்லுக்கு பணம் கொடுத்திருப்பது, சவுதி அரேபியா, கத்தார் ஆகிய இரு நாடுகளாம்!

சர்வதேச அரசியலில் இப்படியான விவகாரங்களை இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடிகிறது. எப்படி என்று இதோ பாருங்கள்:

எகிப்தில், அமெரிக்காவுக்கு பிடிக்காத பார்ட்டி ஆட்சி செய்கிறது. அமெரிக்காவின் நீண்டகால நண்பர்களான சவுதியும், கத்தாரும் எகிப்திய அரசுக்கு ஆயுதம் வாங்க பணம் கொடுக்கின்றன. ஆயுதங்களை சப்ளை செய்வது, அமெரிக்காவின் ஆயுத வர்த்தகத்தின் நேரடி போட்டியாளரான ரஷ்யா!